வித்யாதன் உதவித்தொகை விண்ணப்பிக்கும் முறை Vidyathan Scholarship Application Procedure

வித்யாதன் உதவித்தொகை விண்ணப்பிக்கும் முறை 

வித்யாதன் உதவித்தொகை என்றால் என்ன?

வித்யாதன் கல்வி உதவித்தொகை சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன்’ அறக்கட்டைளையின் மூலமாக கொடுக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற திறனாய்வு தேர்வுக்கு உட்படுத்தபடுவார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் உதவித்தொகை பெறும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெற்றால் அடுத்து அவர்கள் விரும்பும் மேற்படிப்புக்கும் உதவப்படும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், கோவா, ஒடிசா, புது டெல்லி, லடாக், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தற்போது 6500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தமிழ்நாடு வித்யாதன் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, தற்போது 680 மாணவர்கள் தங்களுடைய படிப்பை மேற்க்கொண்டும் மற்றும் பல்வேறு நிருவளங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உதவித்தொகை அறக்கட்டைளையின் மூலமாகவும் வெளிப்புற அதரவாளர்கள் மூலமாகவும் கொடுக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை 10,000 முதல் 60.000 வரை மாநிலம். படிப்பு மற்றும் படிக்கும் காலத்திற்கு தகுந்தாற் போல வேறுபடும். தேர்ந்தெடுக்கபட்ட மாணவாகள் வித்யாதன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகை – 2023 விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

  • வித்யாதன் கல்வி உதவிதொகை பெற மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு இரண்டு லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் தமிழ்நாட்டில் 2022- 23 ஆம் வருட கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தோவில் 80 சதவீத விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். (ஊனமுற்ற மாணவர்களுக்கு 60 சதவீதம் மதிப்பெண்கள் தேவை).

விண்ணப்பிக்கும் முறை

  • நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும் இல்லையென்றால் www.gmail.com அல்லது வேறு மின்னஞ்சல் வழங்கும் இணையதளத்தில் ஒரு கணக்கை திறக்கவும்,
  • எதிர்கால பயன்பாட்டிற்காக மின்னஞ்சல் முகவரி மட்டும் கடவுச்சொல்லை நினைவில் கொள்ள வேண்டும்.
  • வித்யாதன் இணையதளத்தில் புதிய கணக்கை உருவாக்கும் போது கீழ்க்காணும் விவரங்ககளை மறவாமல் பின்பற்றவும். 1) First Name கல்வி சான்றிதழில் உள்ளபடி முதல் பெயரை பதிவு செய்யவும் ,2) Last Name: கல்வி சான்றிதழில் உள்ளபடி கடைசி பெயரை பதிவு செய்யவும்.
  • Email ID: உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும் மின்னஞ்சல் முகவரியை  நினைவில் கொள்க எதிர்கால பயன்பாட்டிற்காக தயவுசெய்து Internet cafe/நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியை பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்
  • Vidyadhan Password மேற்குறிப்பிட்ட கணக்கிற்கு குறைந்தபட்சமாக 8 இலக்கங்களில் கடவுச்சொல்லை உருவாக்கவும் கடவுச்சொல்லை மறந்து விட வேண்டாம்.
  • “Apply Now'” பொத்தானை அழுத்தவும் அழுத்தியவுடன் கணக்கை  செயல்படுத்தும் இணைப்பு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • மின்னஞ்சலை திறந்து உங்கள் கணக்கை செயல்படுத்தும் மின்னஞ்சல் கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் “Account is activated”; இணையதளத்திற்கு செல்லும் 6. இப்பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் விதயாதன் கடவுச்சொல்லை கொண்டு உங்களது கணக்கை துவக்கவும். 7. கணக்கை தொடங்கிய பிறகு “Help” என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கும் முறை மற்றும் நடைமுறையில் உள்ள உதவித்தொகைகளின் விவரங்களை தெரிந்து கொள்ளாலம்.
  • இப்பொழுது “Apply Now” என்ற லிங்கை கிளிக் செய்து நடைமுறையில் உள்ள வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பங்களை நிரப்பிய பிறகு அதை திருத்தம் செய்யலாம்.
  • தயவுசெய்து உங்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி செய்திகளை தொடர்ந்து கவனிக்கவும், ஏனென்றால் அனைத்து விதியாதன் செய்திகள் மற்றும் உரையாடல்கள் உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும்.

தேவையான ஆவணங்கள்:

கீழ்க்காணும் நகல் எடுக்கப்ட்ட ஆவணங்களின் விவரங்கள்

  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • வருமான சான்றிதழ் தகுதியுடைய அதிகாரியின் கையொப்பத்துடன்.
  • புகைப்படம்

தொடர்புக்கு

எவ்வித விவரங்களுக்கு idadhanamnetoundationindik.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். அல்லது +91 9663517131 என்ற எண்களை தொபர்பு கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை

  • மாணவர்களின் விண்ணப்பங்கள் மதிபெண்கள் மற்றும் கொடுக்கபட்ட விவரங்களின்படி  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் திறனாய்வு தேர்வு ,குழு  கலந்துரையாடல் மற்றும் நோமுகத்தேர்வுக்கு Online மூலம் அழைக்கப்படுவார்கள்.மாணவர்களின் விவரம் மற்றும் நோமுகத்தோவின் அறிவிப்புகள் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும்.

முக்கிய தேதிகள்

  • ஆகஸ்ட் 15, 2023 விண்ணப்பிக்க கடைசி தேதி
  • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் ஹால் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படும் (தேதி மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்)
  • தேர்வு குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வுகள் Online மூலம் ஆரம்பமாகும் (தேதி மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்).

உதவித்தொகை விண்ணப்பிக்க 

விண்ணப்பிக்க   வேண்டிய கடைசி நாள் : 15/08/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

Read Also

SSC Stenographer Recruitment 2023

SSC – Staff Selection Commission – Stenographer Grade ‘C’ & ‘D’  பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்

மொத்த பணியிடங்கள்:

1207 பணியிடங்கள்

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு 

ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’: 01.08.2023 அன்று 18 முதல் 30 வயது வரை,

அதாவது, 02.08.1993 க்கு முன் பிறக்காத விண்ணப்பதாரர்கள் மற்றும் அதற்குப் பிறகு அல்ல
01.08.2005 விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘டி’: 01.08.2023 அன்று 18 முதல் 27 ஆண்டுகள்,அதாவது, 02.08.1996 க்கு முன்பும் அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் அல்ல 01.08.2005 விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

  •  SSC தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; அதாவது, https://ssc.nic.in. விரிவான வழிமுறைகளுக்கு, இந்த அறிவிப்பின் இணைப்பு-III மற்றும் இணைப்பு-IVஐப் பார்க்கவும்.
  • ஒரு முறை பதிவு செய்வதற்கான மாதிரி விவரக்குறிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் இணைப்பு-IIIA மற்றும் இணைப்பு-IVA என இணைக்கப்பட்டுள்ளன.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில், விண்ணப்பதாரர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை JPEG/JPG வடிவத்தில் (20 KB முதல் 50 KB வரை) பதிவேற்ற வேண்டும். புகைப்படத்தின் பட அளவு 3.5 செமீ (அகலம்) x 4.5 செமீ (உயரம்) இருக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதை விண்ணப்பதாரர் உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விரும்பிய வடிவத்தில் புகைப்படம் பதிவேற்றப்படாவிட்டால், அவரது விண்ணப்பம்/வேட்பு மனு நிராகரிக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும். ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்படம்/ஏற்றுக்கொள்ள முடியாத புகைப்படத்தை விவரிக்கும் புகைப்படங்களின் மாதிரி இணைப்பு-XV இல் கொடுக்கப்பட்டுள்ளது.
  •  JPEG/JPG வடிவத்தில் (10 முதல் 20 KB வரை) ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம். கையொப்பத்தின் பட பரிமாணம் 4.0 செமீ (அகலம்) x 2.0 செமீ (உயரம்) இருக்க வேண்டும். மங்கலான கையொப்பத்துடன் கூடிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் 23.08.2023 (2300 மணிநேரம்).
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நலனுக்காக ஆன்லைன் விண்ணப்பங்களை இறுதித் தேதிக்கு முன்பே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் இறுதி நாட்களில் இணையதளத்தில் அதிக சுமை இருப்பதால் SSC இணையதளத்தில் இணைப்பு துண்டிக்கப்படுதல்/இயலாமை அல்லது உள்நுழைவதில் தோல்வி ஏற்படும் வாய்ப்பைத் தவிர்க்க கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம்.
  • மேற்கூறிய காரணங்களுக்காக அல்லது ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு காரணங்களுக்காக விண்ணப்பதாரர்கள் கடைசித் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதற்கு ஆணையம் பொறுப்பாகாது.
  •  ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தின் ஒவ்வொரு துறையிலும் சரியான விவரங்களை பூர்த்தி செய்துள்ளதா என்பதை முன்னோட்டம்/அச்சு விருப்பத்தின் மூலம் சரிபார்க்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ 100/- (ரூ நூறு மட்டும்).

  • பெண் வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் சாதிகள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD) மற்றும் இடஒதுக்கீட்டிற்கு தகுதியான முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  •  BHIM UPI, Net Banking அல்லது Visa, MasterCard, Maestro அல்லது RuPay கிரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்ற ஆன்லைன் கட்டண முறைகள் மூலம் மட்டுமே கட்டணத்தைச் செலுத்த முடியும்.

Scheme of Examination:

General Intelligence &Reasoning – 50 Questions

General Awareness – 50 Questions

English Language and Comprehension – 100 Questions

Indicative Syllabus for Computer Based Mode Examination:

(a) General Intelligence & Reasoning: It would include questions of both verbal and non-verbal type. The test will include questions on analogies, similarities and differences, space visualization, problem solving,analysis, judgment, decision making, visual memory, discriminating observation, relationship concepts, arithmetical reasoning, verbal and figure classification, arithmetical number series, non-verbal series etc.The test will also include questions designed to test the candidate’s abilities to deal with abstract ideas and symbols and their relationship,arithmetical computation and other analytical functions.
(b) General Awareness: Questions will be designed to test the ability of the candidates‟ general awareness of the environment around him and its application to society. Questions will also be designed to test the knowledge of current events and of such matters of everyday observation and experience in their scientific aspects as may be expected of an educated person. The test will also include questions relating to India and its neighboring countries especially pertaining to Sports, History, Culture, Geography, Economic scene, General Polity including Indian Constitution, and Scientific Research etc. These questions will be such that they do not require a special study of any discipline.
(c) For VH candidates of 40% and above visual disability, there will be no component of Maps/Graphs/Diagrams/Statistical Data in the General Intelligence & Reasoning/ General Awareness Paper.
(d) English Language & Comprehension: In addition to the testing of candidates’ understanding of the English Language, its vocabulary,grammar, sentence structure, synonyms, antonyms and its correct usage, etc., his/ her writing ability would also be tested.

இந்த தேர்வுக்கு  online–ல் விண்ணப்பிக்க 

விண்ணப்பிக்க   வேண்டிய கடைசி நாள் : 23/08/2023

Leave a Comment