TNUSRB PC EXAM RESULT

TNUSRB PC EXAM RESULT

தமிழ்நாடு காவல் துறையில் 10930 போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை TNUSRB வெளியிட்டது .  கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர் மற்றும் ஃபயர்மேன் பணிகளுக்கான எழுத்துத் தேர்வை டிசம்பர் 13ஆம் தேதி ஆட்சேர்ப்பு ஆணையம் நடத்தியது. தோராயமாக 4.15 லட்சம் விண்ணப்பதாரர்கள் TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இன்று  வெளியிட்டுள்ளது 

Final Answer Key

Roaster wise

Read Also

அறநிலைய துறையில் வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு அரசு அறநிலைய துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்:

5 பணியிடங்கள் 

கல்வித் தகுதி :

ஓட்டுநர்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எட்டாம்  வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள்

1) விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

2) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்வி சான்று நகல்

3)ஓட்டுநர் உரிமம்

4) பள்ளி மாற்று சான்று நகல்

5) சாதி சான்று நால் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)

6) தூத்துக்குடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண் பதிவு சான்றின் துகல் 7) குடும்ப அடையாள அட்டை நகல்

7) இன சுழற்சி முறைக்கு உரிய சான்றின் நகல் (Community Certificate)

8) இதர தகுதிகள் எதுமிருப்பிள் அதன் விபரம் மற்றும் ‘நகல்கள்

9) சுயவிலாசமிட்டு ரூ. 25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை

வயது வரம்பு 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32

தேர்ந்தெடுக்கப்படும் முறை 

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

சம்பளம்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application PDF

விண்ணப்பங்களை  அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்

இந்த சமய அறநிலையத்துறை,

35/1A மேலரதவீதி,

தூத்துக்குடி -628 002

விண்ணப்பிக்க   வேண்டிய கடைசி நாள் : 17.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

Read Also 

அறநிலைய துறையில் வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு அரசு அறநிலைய துறையில் காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்:

5 பணியிடங்கள் 

கல்வித் தகுதி :

எழுத்தர் 

பத்தாம்  வகுப்பு  தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான தகுதி

கணினி இயக்குபவர் 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுச் சான்றிதழ்

நாதஸ்வரம் 

(1) தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும்  சமய நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளியிலிருந்து பெறப்பட்ட தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தோட்டம் 

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 திருவழகு

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 முதல் 45 வயது வரை

சம்பளம்

1.எழுத்தர் – ரூ.15300-48700/-
2. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் – ரூ.15300-48700/-
3. நாதஸ்வரம் – ரூ.15300-48700/-
4. தோட்டம் – ரூ.11600-36800/-
5. திருவழகு – ரூ.10000-31500/-

1.விண்ணப்பதாரர் 01012024ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2.இந்து மதத்தினைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3.ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

4.இவ்விளம்பரம் வெளியிடப்பட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

5.விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

6. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer certificate) நகல் இணைக்கப்பட வேண்டும்

7. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும்,கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும், பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

8.தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும் பணியிட மாறுதல் செய்யப்படுவார்

9.பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

10. விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

11.நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது.

12. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்விதகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களில் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின்போது கொண்டு வரப்பட வேண்டும்.விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்தும். குற்றவியல் நடவடிக்கைக்களுக்கும் உட்படுத்தப்படுவர்.

14. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர் தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு  எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது.

15. விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத்தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

16.திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் அவர்களின் வாரிசுதாரர்கள். அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள் இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தகுதியற்றவர்கள்.

17.உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும்.

18.பணிநியமனம் அரசாணை எண் 14 சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் (அநி 4.2) நாள் 03.09.2020 விதிகளுக்குட்பட்டது. அரசாணை எண் 219 சுற்றுலா, பண்பாடு. அறநிலையங்கள் (அதி 4.2) நாள் 02.09.2022 விதிகளுக்குட்பட்டது.

19. தேர்வு முறையானது அடிப்படைக் கல்வித்தகுதி. அனுபவம், செயல்முறைத் தேர்வுகள். கூடுதல் தகுதிகள் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

20.விண்ணப்ப படிவத்தினை  இணையதளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி  விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவாக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

21.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிட வரிசை எண். மற்றும் எந்த பணியிடத்தில் தெளிவாக குறிப்பிட்டு செயல் அலுவலர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது  அஞ்சல் மூலமாகனை அனுப்பலாம். மேலும் ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிவிட்ட ஒப்பை அட்டையுடனும், அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்

Application PDF

விண்ணப்பங்களை  அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்

இந்த சமய அறநிலையத்துறை,

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் எட்டுக்குடி,

திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் -610 204

விண்ணப்பிக்க   வேண்டிய கடைசி நாள் : 31.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

Goal to Achieve 2024 TNPSC Group 4 –Whatsapp – Join

Leave a Comment