TNPSC Group 4 Examination instructions
குரூப் 4 எழுதவிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.நாளை 09.06.24 நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்
1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : 8:00 -8.30 மணி
2. சலுகை நேரம் : 9.00 மணி
3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : 9.00 மணி
4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : 9:15 மணி
5.தேர்வு தொடங்கும் நேரம் : 9:30 மணி
6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.
7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல் எழுதவும்.
8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்
9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்.
11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.
தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டியவை
1) நுழைவுச்சீட்டு (Hall ticket)
2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball ponit pen)-2
தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்
1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்
2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது
3.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்…
கையொப்பமும் புகைப்படமும்
1.தேர்வர்கள் OMR விடைத்தாளில் தங்களது கையொப்பத்தினை அதற்கென உள்ள இரண்டு இடங்களில் இட வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு முன் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும் தேர்வு முடிவடைந்தபின் மற்றொரு கையொப்பத்தினையும் இடவேண்டும்.
2 தேர்வு முடிவடைந்த பின், தேர்வர்கள், அவர்களது இடது கை பெருவிரல் ரேகைப் பதிவினை விடைத்தாளில் அதற்கென உரியகட்டத்தில் இடவேண்டும் மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களால் கட்டைவிரல் பதிவை இட முடியவில்லை எனில், அக்கட்டத்தை காலியாக விடலாம் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் பத்தி எண் 16- C முதல் 16-F வரை காண்க]
3. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றாலோ, தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (Passport)/ ஓட்டுநர் உரிமம் / நிரந்தரக்கணக்கு அட்டை(PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை இணைத்து, அதனை தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
4. OMR விடைத்தாள் மற்றும் வினாத்தொகுப்பு ஆகியவற்றில் குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்கப்பட்ட பின்னர், விண்ணப்பதாரர் வருகைத்தாளில் தனது பெயர், பதிவெண் உள்ளதை உறுதி செய்து, அதில் தன்னுடைய வினாத்தொகுப்பின் கையொப்பத்தினை இடவேண்டும். எண்ணையும் குறிப்பிட்டு,
5. தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பத்தினை கட்டாயம் பெறவேண்டும்.
வினாத் தொகுப்பு
1.தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக வினாத்தொகுப்பு தேர்வர்களுக்கு வழங்கப்படும். OMR விடைத்தாளில், வினாத் தொகுப்பு எண்ணை எழுதுவதற்கு மற்றும் அதற்கான வட்டங்களை நிரப்புவதற்கு முன், அனைத்து வினாக்களும் வினாத்தொகுப்பில் எவ்வித விடுதல்களுமின்றி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை தேர்வர்கள் முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் குறைபாடு கண்டறியும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக அறைக்கண்காணிப்பாளரிடம், தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கு மாற்றாக குறைபாடு இல்லாத முழுமையான வினாத்தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வினாத்தொகுப்பு எண்ணை OMR விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும். தேர்வு தொடங்கியபின்பு வினாத்தொகுப்பு/ OMR விடைத்தாளில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டு முறையிட்டால், OMR விடைத்தாள் / வினாத்தொகுப்பு மாற்றித் தரப் படமாட்டாது.
2.தேர்வர் வினாத் தொகுப்பு எண்ணை சரியாக எழுதுவதுடன், OMR விடைத்தாளில் அதற்குரிய வட்டங்களில் சரியாக நிரப்ப வேண்டும். தேர்வரால் வட்டங்களில் நிரப்பப்பட்ட வினாத்தொகுப்பு எண்ணின்படியே அவரது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
3.தேர்வர்,வினாத்தொகுப்பின் எந்ததொரு பக்கத்திலும் எவ்வித குறியீடும் இடக்கூடாது நிராகரிக்கப்படும்.
To download – TNPSC Group 4 Model Exam – 2 – PDF – Click here
To download – TNPSC Group 4 Model Exam – 1 – Click here
TNPSC OVERALL GENERAL TAMIL PREVIOUS YEAR QUESTION – ANSWERS