TN 10th Supplementary Exam Result 2023 – TN 10வது துணைத் தேர்வு முடிவுகள் 2023
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 27 முதல் ஜூலை 4, 2023 வரை நடைபெற்றது. முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் இந்த தேர்வை நடத்துகிறது. . தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல்கள் ஆன்லைன் இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Step 1: www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் தேர்வு முடிவுகள் இணையதளத்திற்குச் செல்லவும்.
Step 2: முகப்புப்பக்கத்தில், “தேர்வு முடிவுகள்” பகுதிக்குச் செல்லவும்
Step 3: தேர்வு முடிவுகள் பிரிவில், SSLC துணை- ஜூன் 2023 முடிவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
Step 4: கிளிக் செய்த பிறகு, புதிய உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
Step 5: உங்கள் TN SSLC ஹால் டிக்கெட் 2023 பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்ட புலத்தில் உள்ளிடவும்.
Step 6: அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, “மதிப்பெண்களைப் பெறு” விவரங்களைக் கிளிக் செய்யவும்.
Step 6: உங்கள் TN 10வது துணை முடிவு 2023 திரையில் தோன்றும்.
Step 7: TN 10 ஆம் ஆண்டு நிலுவைத் தேர்வு முடிவு 2023 மதிப்பெண் தாளைப் பதிவிறக்கி, எதிர்காலக் குறிப்புக்காக Print out எடுத்து வைத்து கொள்ளவும்
Read also
Social Welfare Department Recruitment 2023
ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC-A) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC-A), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சேவை மையம், சென்னை-Aக்கான தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்காக கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்:
4 பணியிடங்கள்
வழக்கு அலுவலர்கள்(Case worker) (காலிப்பணியிடங்கள் 3)
சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலேர் குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். யது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் 1)
ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் பட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம்,
சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18/08/2023