திருக்குறள் – TNPSC முந்தைய ஆண்டு வினா விடைகள் 

திருக்குறள் – TNPSC முந்தைய ஆண்டு வினா விடைகள் 

1.சமய நடுநிலைப் பண்புகொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்

A. எல்லாச் சமயத்தவரும் இது எம் நூல் என்று கூறும் சிறப்புப் பெற்றதால்
B.
கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப் பெற்றதால்
C.
இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
D.
மனித இனத்திற்குப் பொதுவான ஒழுக்கமும், அறிவும் அறிவுறுத்தப்படுவதால்

(A) 1 மட்டும் சரி

(B) 2 மட்டும் சரி

(C) 3 மற்றும் 4 மட்டும் சரி

(D) அனைத்தும் சரி

2…….. யிவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு
மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்?

  1. அறமும் பொருளும்
  2. நடுவு நிலைமையும் அடக்கமுடைமையும் –
  3. பொருளும் இன்பமும்
  4.  எண்ணும் எழுத்தும்

 

3……துணிக கருமம் துணிந்தபின்
………
என்ப திழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்?

  1.  நிறையப் பொருள் சேர்த்த பிறகு
  2.  தானம் செய்த பிறகு
  3.  நன்றாகச் சிந்தித்து அதற்குப் பிறகு
  4.  தக்க காலமறிந்து

 

4.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”
– “
அச்சொல்லை ” என திருவள்ளுவர் உரைப்பது எதை ?

  1. நீங்கள் பயன்படுத்திய பொருளில் வேறொரு சொல்.
  2.  சொல்லுக்கு மாற்றாக வேறுசொல்.
  3. நீங்கள் பயன்படுத்திய சொல்லுக்கு வேற்றுமொழிச் சொல்.
  4.  மற்றவர்களால் வெல்ல முடியாத உங்களுடைய சொல்.

5‘……………. நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
மேற்கூறிய திருக்குறளில் திருவள்ளுவர் நாவடக்கத்தை பற்றி கூறுகிறார் – இப்பண்பு எவருக்குப் பொருந்தும் ?

  1. பொருள் உடையவருக்கு
  2. பொருள் அற்றோருக்கு
  3.  நல்லோருக்கு
  4.  அனைவருக்கும்

6.ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை”
மேற்காணும் குறளில் இருந்து நீவிர் அறிவது யாது?

  1.  வரவைப் பெருக்குவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்.
  2.  செலவைக் கவனமாக மேலாண்மை செய்தால் வரவு குறைவானாலும் எவ்விதத் துன்பமுமின்றி வாழ முடியும்.
  3. வரவு எத்தகையதாயினும் செலவின் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துக.
  4. வரவு, செலவு இரண்டையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

7………….. கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளில் திருவள்ளுவர், ‘எதைக் கூறுவது கனியிருக்கும் போது காயைக் கவர்வதற்கு ஒப்பாகும் என்கிறார் ?

  1.  உண்மையிருக்கப் பொய்மை கூறல்.
  2. இம்மை இருக்க மறுமை பற்றிக் கூறல்.
  3. இனியவை இருக்க இன்னாதது கூறல்.
  4.  அடக்கமுடமைக்குப் பதிலாக அடக்கமின்மை பற்றிப் பேசுவது..

8.(i) ‘பொய்மையும் வாய்மை யிடத்த ………………….. “
(ii) ‘
புறந்தூய்மை நீராலமையு மகந்தூய்மை ……….
இவ்விரண்டு குறள்களையும் ஒருசேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுவீர் ?

  1. பொய்மை
  2.  வாய்மை
  3.  புறந்தூய்மை
  4. புரைதீர்ந்த நன்மை

9.பின்வருவனவற்றுள் திருக்குறளில் இல்லாத இயல்பு எது?

  1. மதச்சார்பின்மை
  2. இரக்கம்
  3. அனைத்தையும் உள்ளடக்கிய சிந்தனை
  4. சில மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதும், அவர்களின் தனிப்பட்ட வீரத்தைப் பறைசாற்றுவதும்.

10.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ……………….
………………………………………………… “
மேற்கூறிய திருக்குறளின் படி ஒரு சமுதாயத்தில் தனி மனிதர்களுக்கிடையேயான வேற்றுமைக்குக் காரணமாக இருப்பது :
(i)
அவர்களுடைய செயல்களின் தரம்
(ii)
அவர்களின் உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு

  1.  (i) மட்டும்
  2.  (ii) மட்டும்
  3. (i) மற்றும் (ii)
  4.  மேற்காணும் எவையும் அல்ல.

11.மதச்சார்பற்ற இலக்கியம் என்ற வகையில் திருக்குறளின் முக்கியத்துவம் யாது?

  1. எந்த ஒரு குறிப்பிட்ட மத மதிப்பீட்டிற்கான இலக்கியமாகவும் இல்லாது மானுடம் முழுமைக்கும் பொருந்தும் தனித்துவம்.
  2. மானுட நலனை முன்நிறுத்தும் தனித்துவம்.
  3. திருக்குறள் வாசிப்பு நமது நாட்டை கட்டமைத்த தலைவர்களின் மதச் சார்பற்ற தன்மையை வலிமைப்படுத்தியது.
  4.  மேற்கண்ட அனைத்தும்.

12.குறள் குறித்த சிறந்த விளக்க உரையினை உருவாக்கியவர் யார்?

  1.  கம்பர்
  2.  அகஸ்தியர்
  3. பரிமேலழகர்
  4.  காளமேகப்புலவர்

13._______, _______, ________ இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு. மேற்காணும் திருக்குறளில் இடம்பெறும் இம்மூன்றும்என்னும் சொல் குறிப்பவை.

(A) கல்வி, செல்வம், வீரம்

(B) அறம், பொருள், இன்பம்

(C) தூங்காமை, கல்வி, துணிவு

(D) அன்பு, பண்பு, பாசம்

14.பலகற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார் ?

(A) கற்றோர் அவையில் பேச அஞ்சுகின்றவரை

(B) உலகத்தோடு ஒத்து நடக்காதவரை

(C) போர்க்களத்திற்குச் செல்ல அஞ்சுகின்றவரை

(D) செல்வந்தரைக் கண்டு அஞ்சுகின்றவரை

15.நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி”, என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் கூறுகிறார் ?

(A) இயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவகுத்தல்

(B) அறம், பொருள், இன்பம், வீடு

(C) கொடை, கருணை, நீதி, தளர்ந்த குடிகளைக் காத்தல்

(D) மேற்கண்ட அனைத்தும்

16.வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் – இதில் வலியுறுத்தப்படுவது எது ?

(A) போலி மரியாதை

(B) போலி உண்மை

(C) போலி ஒழுக்கம்

(D) போலி நடிப்பு

17.துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் நெறிப்படுத்துகிறார் ?

(A) அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்

(B) எதிர்த்துப் போராடுதல்

(C) துன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்

(D) துன்பத்தின்போது வருந்துதல்

18.”…….. இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்”
மேற்காணும் திருக்குறள் எவ்வினைகள் நடைபெறாது என்று கூறுகிறது ?

(A) தர்மம், அன்பு

(B) தானம், தவம்

(C) தவம், இன்பம்

(D) அறம், பொருள்

19.அரம்போலும் கூர்மைய ரேனும மரம்போல்வர்மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்?

(A) பயனில் சொல் பேசுபவர்

(B) மக்கள் பண்பு இல்லாதவர்

(C) அகத்தில் அன்பு இல்லாதவர்

(D) பிறரின் பொருளுக்கு ஆசைப்படுபவர்

20.பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு எதைப் போன்றது என திருவள்ளுவர் கூறுகிறார்?

(A) அகநக நட்பது போன்றது

(B) நவில்தொறும் நூல் நயம் போன்றது

(C) கடுத்தது காட்டும் முகம் போன்றது

(D) கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் போன்றது

பாரதியார் – TNPSC முந்தைய ஆண்டு வினா விடைகள்

Leave a Comment