SBI-SCO Recruitment 2024
SBI – State Bank of India – சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer – SCO) காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.169 உதவி மேலாளர் பணி இடங்களுக்கு, ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்
1. உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்): 42 பணியிடங்கள்,
2. உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்): 25 பணியிடங்கள்,
3. உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு): 101 பணியிடங்கள்,
4. உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்): 1 பணியிடம்
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கட்டிடங்கள், சோதனைப் பொருட்கள் அல்லது திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்):
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யுபிஎஸ், ஜெனரேட்டர்கள், லிஃப்ட் போன்ற மின் சாதனங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய துறை சார்ந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு):
தீயணைப்பு பொறியியல் அல்லது அதற்கு ஈடான பட்டம் பெற்றிருத்தல் அவசியம். தீ பாதுகாப்பு அல்லது தீயணைப்புப் பணிகளில் 2- 3 வருட அனுபவம் வேண்டும்.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு 2025 ஜனவரியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு முறை:
General Aptitude (90 நிமிடங்கள்), தொழில்சார் அறிவு (45 நிமிடங்கள்)
சம்பள விவரம் :
ரூ.48480 முதல் 85920 வரை தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்/ ஓபிசி – ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here