мостбет Mostbet Казино Аркада зеркало играть в онлайн казино на деньги jugabet apuestas en línea winchile casino Слоты онлайн бесплатно Riobet зеркало сегодня 1Win казино зеркало Казино Чемпион Официальный Сайт лучшее казино для игры на деньги

March Current Affairs 2024 

March Current Affairs 2024 

இ-டிக்கெட்

  • மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலமாக இ-டிக்கெட் பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
  • தமிழக அரசு இத்திட்டத்தினை பாரத் ஸ்டேட் பாங்குடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

  • நடப்பு காலாண்டில் (டிசம்பர் 3வது காலாண்டு)பொருளாதார வளர்ச்சியானது 40%-மாக உள்ளதென தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • கடந்த காலாண்டை விட (60%) பொருளாதர வளர்ச்சியானது தற்போது உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கடற்கரும்புலி தினம் (World Seagrass Day) – மார்ச் 01

உலக சிவில் பாதுகாப்பு தினம் (World Civil Defence Day) – மார்ச் 01

சமுத்ரா லக்ஸ்மனா

  • விசாகப்பட்டினத்தில்இந்தியா மற்றும் மலேசியா இடையேயான கூட்டு கடற்படை பயிற்சியானது சமுத்ரா லக்ஸ்மனா எனும் பெயரில் நடத்தப்பட்டுள்ளது.

3-4th  March 2024

கடற்படையில் இணைப்பு

  • நீர் மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தஎம்எச் 60 ஆர் ஹீ ஹாக் (MH 60 R He Hawk) ஹெலிக்காப்டர் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஹெலிக்காப்டர் கொச்சியின் ஐஎன்எஸ் கருடா தளத்தில் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் (National Security Day) – Mar 04

  • 03.1966-ல் தேசிய பாதுகாப்பு ஆணையம் (|National Safety Council) உருவாக்கப்பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது

ADITI திட்டம்

  • பாதுகாப்பு துறைகளில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தADITI திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • தில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு இணைப்பு 2024 நிகழ்ச்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

சட்ட பாதுகாப்பு விதி

  • நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்கவோ அல்லது குறிப்பிட்ட தகவலை பேசவோ உறுப்பினர்கள்லஞ்சம் பெறுவது குற்றத்தண்டனை என உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் சட்ட பாதுகாப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் சட்ட பாதுகாப்பு விதி – 105(2)
  • சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் சட்ட பாதுகாப்பு விதி – 194(2)

இந்திரம்மா வீட்டுத் திட்டம்

  • தெலுங்கானாவில் வீடுகட்டஇந்திரம்மா வீட்டுத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்

  • இந்தியாவின்18வது மக்களவைத் தேர்தலானது 543 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலானது 1951-52 ஆண்டுகளில் 489 தொகுதிகளில் நடைபெற்றது.
  • cVIGIL – வாக்களிக்கப்தற்காக பணம் வழங்குதலை தடுக்க தொடங்கப்பட்ட செயலி

போலியோ 

  • மார்ச் 3 முதல் தமிழகத்தில் 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
  • 2004-ல் தமிழக்தில்போலியோ இல்லா நிலை உருவானது

உயர்கல்வி சேர்க்கை

  • புதுமைப் பெண் திட்டத்தால்உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இத்திட்டம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தின்படி 6 முதல் 12 வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமாகும்.

100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

  • இந்திய கிரிக்கெட் வீரர்ரவிச்சந்திரன் அஸ்வீனும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்டில் விளையாடுகின்றன.
  • 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 14வது இந்திய வீரர் – ரவிச்சந்திரன் அஸ்வீன்
  • 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 17வது இங்கிலாந்து வீரர் – ஜானி பேர்ஸ்டோ

புதிய தகவல் தளம்

  • மாநிலங்கள் முக்கியத்துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்கNITI for States என்ற புதிய தகவல் தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • ஒவ்வொரு மாநிலமும் ஏனைய மாநிலங்களின் போக்குகளை அறிந்து கொள்ளவும், தங்கள் மாநிலத்தில் கொள்கைகளை உருவாக்குவதற்கும் இந்த தளம் உதவுதாக நிதி ஆயோக் (NITI Aayog) தெரிவித்துள்ளது.
  • NITI Aayog – 01.01.2015

தொழில் முனைவோராக்கும் தூய்மை பணியாளர்கள்

  • தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாகமாற்றும் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
  • தூய்மைப் பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் ஊர்தி வாங்குவதற்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
  • அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் 50% மானியமும், இதர பிரிவினருக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு விருது

  • பெண் குழந்தைகளின் பாலின உயர்விற்குசிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.
    1. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரான விஷ்ணு சந்திரன்-க்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
    2. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளரான கலைச்செல்வி மோகன்-க்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது
    3. ஈராேடு மாவட்ட ஆட்சியாளரான இராஜகோபால் சுக்கரா-க்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் (உலகச் சாதனை)

  • ரவிச்சந்திரன் அஸ்வின்டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் (36வது முறை) என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • இங்கிலாந்து கிரிக்கெட் வீரரானஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்கள் வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருது

  • எழுத்தாளர்கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்த கருங்குன்றம் என்ற நூலுக்கு தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மமாங்தய் எழுதிய தி பிளாக் ஹில் (The Black Hill) என்ற நூலை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
  • 24வது மொழிகளில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக தேர்தல் ஆணையர்

  • தமிழக தேர்தல் ஆணையராகபா.ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தேர்தல் ஆணையர் பதவிக்காலம் – 5 ஆண்டுகள் (அ) 65 வயது வரை
  • தேர்தல் ஆணையம் விதி – 324 to 329
  • தேர்தல் ஆணையம் – 24.01.1950
  • தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25

இந்திய கப்பற்படையில் ஐஎன்எஸ் அக்ரே மற்றும் ஐஎன்எஸ் அக்ஷ்ய் கப்பல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  • இக்கப்பல்கள் கொல்கத்தா கார்டன் ரீச் ஷிப் பில்டர் மற்றும் என்ஜீனியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

புதிய மாநகராட்சிகள்

  • தமிழ்நாட்டில் புதிதாகபுதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • 1988 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட திருத்தத்தின் படி 21ஆக இருந்த மாநகராட்சிகளின் எண்ணிக்கையானது தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது.

 March 16 2024

1.சமுத்திர லக்சமணா எனும் இருதரப்பு கடல்சார் பயிற்சி எங்கு நடத்தப்பட்டுள்ளது?

  1. ஆந்திரா
  2. தமிழ்நாடு
  3. ஒரிசா
  4. கோவா

ஆந்திரா (விசாகப்பட்டினம்)

 Explanation:

  • சமுத்திர லக்ஸமனா – இந்தியா மற்றும் மலேசியா இரு தரப்பு கடல்சார் பயிற்சி
  • சமுத்திர சக்தி – இந்தியா மற்றும் இந்தோனேசியா இருதரப்பு கடல்சார் பயிற்சி
  • SLINEX 2023 – இந்திய மற்றும் இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சி

2.பின்வரும் எந்த மாநிலத்தில் கீர்தி திட்டம் (KIRTI Scheme) முன்னெடுக்கப்பட்டுள்ளது?

  1. மகாராஷ்டிரா
  2. குஜராத்
  3. பீகார்
  4. சண்டிகர்

Answer:சண்டிகர்

Explanation:

  • KIRTI – Khelo India Rising Talent
  • 9-18 வயது வரையிலான வளர்ந்து வரும் மாணவ மாணவியர்களின் திறமைகளை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்பட்டது.

 3.விதவை மறுமணத்திற்கான வித்வா புனர்விவா ப்ரோட்சஹன் யோஜனா என்னும் திட்டத்தினை துவங்கியுள்ள மாநிலம்

  1. ஒடிசா
  2. மத்தியப்பிரதேசம்
  3. உத்திரப்பிரதேசம்
  4. ஜார்க்கண்ட்

Answer:ஜார்க்கண்ட்

Explanation:

  • இந்தியாவில் விதவை மறுமண ஊக்குவிக்கும் திட்டத்தை துவங்கியுள்ள முதல் மாநிலம் என்ற பெருமையை ஜார்க்கண்ட் பெற்றுள்ளது.

4.உலக ஆன்மிக திருவிழா நடைபெற்ற நகரம் எது?

  1. விசாகப்பட்டினம்
  2. ஹைதராபாத்
  3. சென்னை
  4. புனே

Answer:ஹைதராபாத்

5.வட இந்தியாவின் முதல் ஹோமியோபதி கல்லூரி நிறுவப்பட்டுள்ள இடம்

  1. கத்துவா
  2. லாகூர்
  3. கொல்கொத்தா
  4. போபால்

Answer:கத்துவா (ஜம்மு & காஷ்மீர்)

6.இந்திய இராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ள இடம்

  1. பஞ்சாப்
  2. டெல்லி
  3. ராஜஸ்தான்
  4. ஆந்திரா

Answer:ராஜஸ்தான் (ஜோத்பூர்)

Explanation:

ராஜஸ்தான், ஜோத்பூர் நகரில் இந்தியா இராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

  1. _________ உமிழ்வினை கண்காணித்து அளவிட மீத்தேன்சாட் செயற்கைக்கோள் விண்ணில் அனுப்பப்பட்டது?
  1. மீத்தேன்
  2. கார்பன்
  3. ஹைட்ரஜன்
  4. ஆக்ஸிஜன்

Answer:– மீத்தேன்

Explanation:

  • நியூசிலாந்து விண்வெளி மையம் மற்றும் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் இணைந்து மீத்தேன்சாட் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.

8.எராஸ்மஸ் பரிசு 2024 வழங்கப்பட்ட இந்திய எழுத்தாளர் யார்?

  1. கெளதமன் நீல் ராசு
  2. அமிதவ் கோஷ்
  3. நெல்லை ஜெயந்தா
  4. அரிமாப் பாமகன்

Answer:அமிதவ் கோஷ்

Explanation:

  • நெதர்லாந்தின் பிரீமியம் எராஸ்மியனம் அறக்கட்டளை சார்பில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரான அமிதவ் கோஷ் 2018-ல் ஞானபீட விருது (இலக்கிய உயரிய விருது) பெற்றுள்ளார்.
  • கவிக்கோ விருது 2022 – நெல்லை ஜெயந்தா
  • தேவநேயப் பாவாணர் விருது 2023 – அரிமாப் பாமகன், கெளதமன் நீல் ராசு

9.தேசிய தடுப்பூசி தினம் (National Vaccination Day) அனுசரிக்கப்படும் தினம்

  1. மார்ச் 14
  2. மார்ச் 16
  3. மார்ச் 12
  4. மார்ச் 10

Answer:– மார்ச் 16

Explanation:

  • கருப்பொருள்: Vaccines work for all.
  • 1995-ல் போலியோ ஒழிப்பு திட்டம் இந்தியாவில் தொடக்கப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

Weekly Current Affairs March 17 – 23

250 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் தபால் நிலையம்

  • 1774-ஆம்‌ ஆண்டு அப்போதைய வங்க மாகாண கவர்னர்‌ ஜெனரல்‌ வாரன்‌ஹேஸ்டிங்ஸ்‌ கொல்கத்தாவில்‌ வைத்த இந்தியாவின்‌ முதல்‌ தபால்‌ நிலையம்‌ 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • 1773-ஆம்‌ ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்‌ கீழ்‌ வங்கத்தின்‌ முதல்‌ கவர்னர்‌ ஜெனரலாக வாரன்‌ ஹேஸ்டிங்ஸ்‌ நீயமிக்கப்பட்டார்‌. அவரது பதவிக்காலத்தில்‌ இந்தியாவில்‌ முதல்‌ தபால்‌ நிலையம்‌ அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மியுசிக்‌ அகாடமி 98-வது ஆண்டு விருதுகள்‌

சங்கீத கலாநிதி

  • இசை உலகில்‌ மிகப்‌ பெரிய கவுரவமாக கருதப்படும்‌ மியூசிக்‌ அகாடமியின்‌ “சங்கீத கலாநிதி” விருதுக்கு பிரபல கர்னாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர்‌ டி.எம்‌.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்‌.
  • கர்னாடக இசையை அதன்‌ பாரம்பரிய பெருமை குறையாமல்‌, சமூகத்தின்‌ எளிய, சாமானிய மக்களுக்கும்‌ கொண்டு சேர்த்தவர்‌. இசை குறித்து பல்வேறு புத்தகங்களை ஆங்கிலத்தில்‌ எழுகியிருப்பவர்‌.

சங்கீத கலா ஆச்சார்யா

  • மிருதங்க வித்வான்‌ போராசிரியர்‌பாறசாலா ரவி, கர்னாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர்‌ கீதா ராஜா ஆகியோர்‌ “சங்கீத கலா ஆச்சார்யா” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுூள்ளனர்‌.

டிடிகே விருது

  • இசை உலகில்‌ திருவையாறு சகோதரர்கள்‌ எனப்படும்‌ எஸ்‌.நரசிம்மன்‌, எஸ்‌.வெங்கடேசன்‌ ஆகியோர்‌ 40 ஆண்டூ காலமாக மெலட்டூர்‌ பாகவத மேளா பாரம்பரியத்தில்‌ இசை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள்‌. இவர்களும்‌, வயலின்‌ வித்வான்‌ ஹெச்‌.கே. நரசிம்மமூர்த்தியும்‌ டிடிகே விருதுக்கு தேர்வாகியுள்ளனர்‌.

இசை அறிஞர்‌ விருது

  • கர்னாடக இசையில்‌ முனைவர்‌ பட்டம்‌ பெற்றிருக்கும்‌ மார்க்ரெட்‌ பாஸ்டின்‌ இந்த ஆண்டூக்கான மியூசிக்‌ அகாடமியின்‌ இசை அறிஞர்‌ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்‌.

 நிருத்திய கலாநீதி விருது

  • பிரபல மோகினியாட்ட கலைஞராக அறியப்படும்‌ டாக்டர்‌ நீனா பிரசாத்‌, மியூசிக்‌ அகாடமியின்‌ இந்த ஆண்டுக்கான நிருத்திய கலாநிதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌.
  • சங்கீதகலாநிதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டூள்ள டி.எம்‌.கிருஷ்ணா, 2024 டிசம்பர்‌ 15 தொடங்கி 2025 ஜனவரி 1-ம்‌ CHF வரை நடைபெறும்‌ மியூசிக்‌ அகாடமியின்‌ 98-வது ஆண்டு கருத்தரங்களுக்கு தலைமை தாங்குவார்‌.
  • 2025 ஜனவரி 3-ம்‌ தேதி நடைபெறும்‌ மியூசிக்‌ அகாடமியின்‌ 18-வது ஆண்டு நாட்டிய விழாவில்‌ நிருத்ய கலாநிதி விருது வழங்கப்படும்‌

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் திட்டம் 414

  • இந்தியத் தேர்தல் ஆணையம் (EC) ஆனது இமாச்சலப் பிரதேசத்தில் “திட்டம் 414” என்ற சிறப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த திட்டம் கடந்த மக்களவைத் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவான 414 வாக்குச் சாவடிகளில் அதிகபட்ச வாக்குப் பதிவினை பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி சம்மான்‌ விருது

  • கேரளத்தைச்‌ சேர்ந்த கவிஞரும்‌ எழுத்தாளருமான பிரபா வர்மாவுக்கு 2023-ஆம்‌ ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான்‌ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அவர்‌ இயற்றிய ‘ ரெளத்ர சாத்விகம்‌ என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதை வழங்கும்‌ கே.கே.பிர்லா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான்‌ விருது தமிழ்‌ எழுத்தாளர்‌ சிவசங்கரிக்கு
    வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை இசை அகாடமி விருதுகள் 2024

  • சங்கீத கலாநிதி விருது – தோடூர் மடபுசி கிருஷ்ணா
  • சங்கீத கலா ஆச்சார்யா விருது – பரஸ்சலா ரவி ( இரவீந்திரன் நாயர்) மற்றும் கீதா ராஜா
  • TTV விருது – நரசிம்மன் மற்றும் வெங்கடேசன் மற்றும் H.K.நரசிம்மமூர்த்தி
  • நிருத்ய கலாநிதி விருது – டாக்டர் நீனா பிரசாத்

இந்தியாவில்‌ வேலைக்குச்‌ செல்லும்‌ பெண்கள்‌ 37% அதிகரிப்பு

  • இந்தியாவின்‌ 69.2 கோடி பெண்களில்‌ 37 சதவீதம்‌ பேர்‌ வேலைக்குச்‌ சென்று பணம்‌ ஈட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
  • தெலங்கானா தலைநகர்‌ ஹைதராபாத்‌ 34 சதவீதத்துடன்‌ முன்னணியிலும் புணே 33 சதவீதத்துடன்‌, சென்னை 29 சதவீதத்துடன்‌ அடுத்தடுத்த இடங்களில்‌ உள்ளன.
  • அதேசமயம்‌, தில்லி-என்சிஆர்‌ பகுதியில்‌ முந்தைய 2022- ஆம்‌ ஆண்டில்‌ இருந்து 2 சதவீத குறைந்து
    20 சதவீதமாக உள்ளது.

நோக்டிஸ் எரிமலை செவ்வாய்க் கிரகம்

  • செவ்வாய்க் கிரகத்தில் ‘பிரம்மாண்டமான’ எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘நோக்டிஸ் எரிமலை’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த எரிமலை 29,600 அடி உயரமும் , சுமார் 450 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.

உலகின்‌ மகிழ்ச்சியான நாடுகள்‌ பட்டியல்‌

  • உலகின்‌ மகிழ்ச்சியான நாடுகள்‌ பட்டியலில்‌ பின்லாந்து முதலிடம்‌ பிடித்துள்ளது. இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்கள் முறையே டென்மார்க்‌ மற்றும் ஐஸ்லாந்து நாடுகள்‌ பிடித்துள்ளன.
  • ஐ.நா. ஆதரவுடன்‌ ஆண்டுதோறும்‌ உலகின்‌ மகிழச்சியான நாடுகள்‌ பட்டியல்‌ வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும்‌ தனி நபர்‌ வருவாய்‌, சமூக ஆதரவு, சுகாதாரம்‌ உட்பட பல்வேறு அம்சங்களின்‌ அடிப்படையில்‌ இந்த பட்டியல்‌ வெளியிடப்படுகிறது.
  • மொத்தம்‌ 143 நாடுகளில்‌ நடத்தப்பட்ட ஆய்வுகளில்‌ தலிபான்கள்‌ நிர்வாகத்தில்‌ உள்ள ஆப்கானிஸ்தான்‌ கடைசி இடத்தில்‌ உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும்‌ இந்தியா
    126-வது இடத்தில்‌ உள்ளது.

1.DEVIN AI என்பது என்ன?

  1. உலகின் முதல் ஏ ஐ ரோபோ ஆசிரியர்
  2. உலகின் முதல் ஏஐ ரோபோ மெய் காப்பாளர்
  3. உலகின் முதல் ஏ ஐ மென் பொறியாளர்
  4. உலகின் முதல் ஏ ஐ கேமர்

 Answer:– உலகின் முதல் ஏ ஐ மென் பொறியாளர்

2.இந்தியாவில் ஆயுத தொழிற்சாலைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. மார்ச் 17
  2. மார்ச் 18
  3. மார்ச் 16
  4. மார்ச் 5

Answer:– மார்ச் 18

Explanation:

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியம் 1787ல் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டது. 1802 மார்ச் 18ல் உற்பத்தி தொடங்கியது. இந்நாளே (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

3.பிரச்சார் பாரதி வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  1. நவநீத்குமார் சேகல்
  2. ஜகதீப் தன்கர்
  3. சூரியகுமார்
  4. சுனில் மிட்டல்

Answer:– நவநீத்குமார் சேகல்

Explanation:

Prasar Bharati appoints Navneet Sehgal as the new Chairman

4.இந்திய இராணுவம் மற்றும் சீஷெல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு (SDF) இடையே நடைபெற்றக் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?

  1. தர்மா கார்டியன்
  2. Sea Defenders 2024
  3. Exercise தன்சீக்
  4. Lemutiye Exercise 2024

Answer:– Lemutiye Exercise 2024

5.Women’s Premier League 2024-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி கோப்பையை வென்ற அணி?

  1. மும்பை இந்தியன்ஸ்
  2. சென்னை சூப்பர் கிங்ஸ்
  3. உபி வாரியர்ஸ்
  4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Answer:– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Explanation:

ஆண்களுக்கு நடத்தப்படும் IPL போன்று பெண்களுக்கு நடத்தப்படும் மகளிர்‌ பிரிமியர்‌ லீக்‌ கிரிக்கெட்டின்‌ 2-அவது சீசனில்‌, ராயல்‌ சேலஞ்சர்ஸ்‌ பெங்‌களூர்‌ 8 விக்கெட்டுகள்‌ வித்தியாசத்தில்‌ டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல்‌ முறையாக சாம்பியன்‌ கோப்பையை வென்றது.கடந்த முறை பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது குறிப்பிடத்தக்கது.

6.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகர் என்னவென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

  1. அதுல்யா நகர்
  2. அஹல்யா நகர்
  3. லட்சுமிபாய் நகர்
  4. சிவாஜி நகர்

 Answer:– அஹல்யா நகர்

7.உலகளாவிய மறுசுழற்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. மார்ச் 16
  2. மார்ச் 18
  3. மார்ச் 19
  4. மார்ச் 20

Answer:– மார்ச் 18

8.அண்மையில் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனுக்குப் பதிலாக தெலுங்கானாவின் பொறுப்பு ஆளுநராகவும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருப்பவர் யார்?

  1. பொன் ராதாகிருஷ்ணன்
  2. சி.பி ராதாகிருஷ்ணன்
  3. பி.எஸ் ஸ்ரீதரன் பிள்ளை
  4. வானதி சீனிவாசன்

Answer:– சி.பி ராதாகிருஷ்ணன்

Explanation:

ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும், தெலங்கானா ஆளுநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

9.2024 ஆம் ஆண்டு சிறந்த பெண் ஊடகவியலாளருக்கான எந்த விருது பத்திரிக்கையாளர் கிரிஷ்மா குதர் மற்றும் ரித்திகா சோப்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. சமேலி தேவி ஜெயின் விருது
  2. ராஜாராம் மோகன் ராய் விருது
  3. ஸ்ரீராம் விருது
  4. ரெட் இங்க் விருது

Answer:–  சமேலி தேவி ஜெயின் விருது

Explanation:

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் ஊடகவியலாளருக்கான சமேலி தேவி ஜெயின் விருது, சுதந்திர பத்திரிகையாளர் (Independent Journalist ) கிரீஷ்மா குதர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸின் ரித்திகா சோப்ரா ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

10.அண்மையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பவர் யார்?

  1. வானதி சீனிவாசன்
  2. ஜோதி நிர்மலா சாமி
  3. சத்யபிரதா சாகு
  4. வெ. பழனி குமார்

Answer:– ஜோதி நிர்மலா சாமி

Explanation:

தமிழக தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் ஓய்வுபெற்றதை அடுத்து, பத்திரப்பதிவுத் துறை செயலராக இருந்த ஜோதி நிர்மலாசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சுக்பீர் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

11.சிறந்த மனிதாபிமான புரவலருக்கான P.V.நரசிம்மராவ் விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?

  1. லட்சுமி மிட்டல்
  2. அனில் அம்பானி
  3. ரத்தன் டாட்டா
  4. அதானி

Answer:– ரத்தன் டாட்டா

12.எந்த நிறுவனம் அதன் சமீபத்திய AI கேமிங் ஏஜென்ட் ‘SIMA’ ஐ அறிமுகப்படுத்தியது?

  1. Google
  2. Microsoft
  3. Perplexity AI
  4. Activision Blizard

Answer:– Google

Explanation:

மனிதர்களுடன் வீடியோ கேம்களை விளையாடக்கூடிய திறன்மிக்க AI கேமிங் ஏஜென்ட் தான் Google Deepmind AI ‘SIMA’ (Scalable Instructable Multiworld Agent).

13.இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து ‘டைகர் ட்ரையம்ப்-24’ (Tiger Triumph-24) என்ற கூட்டு ராணுவ பயிற்சியை நடத்துகிறது?

  1. ஸ்வீடன்
  2. பிரான்ஸ்
  3. சவுதி அரேபியா
  4. அமெரிக்கா

Answer:– அமெரிக்கா

Explanation:

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு முப்படை பயிற்சியானது அமெரிக்காவின் கிழக்கு கடற்பரப்பில் மார்ச் 18 முதல் 31 வரை நடைபெறவுள்ளது.

14.கோவிந்த் கமிட்டி பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?

  1. லோக்பால் கமிஷன்
  2. ஒரே நாடு ஒரே தேர்தல்
  3. திட்டக்குழு கமிஷன்
  4. விஜிலென்ஸ் கமிஷன்

Answer:– ஒரே நாடு ஒரே தேர்தல்

Explanation:

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த 18,626 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்துள்ளது.

MARCH 21 – 26 

  1. உலக தண்ணீர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
  2. மார்ச் 20
  3. மார்ச் 21
  4. மார்ச் 22
  5. மார்ச் 23

Answer:– மார்ச் 22

Explanation:

உலக தண்ணீர் தினம் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான மாநாட்டில் இருந்து அனுசரிக்கப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: அமைதிக்காக தண்ணீரைப் பயன்படுத்துதல் /Leveraging water for Peace

2.அண்மையில் வினய் குமார் எந்த நாட்டுக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  1. டென்மார்க்
  2. கானா
  3. தென் ஆப்பிரிக்கா
  4. ரஷ்யா

Answer:– ரஷ்யா

Explanation:

இந்திய வெளியுறவுத்துறையின் 1992 பேட்ச் அதிகாரியான வினய் குமார், 2021 முதல் மியான்மர் நாட்டிற்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார். அவர் விரைவில் ரஷ்ய தூதராக பொறுப்பேற்க உள்ளார். இதுவரை பவன்குமார் அந்த பதவியில் இருந்தார்.

3.உலக டவுன் சின்ட்ரோம் நோய் (மனநலிவு நோய்) தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?

  1. மார்ச் 20
  2. மார்ச் 21
  3. மார்ச் 19
  4. மார்ச் 22

Answer:– மார்ச் 21

Explanation:

World Down Syndrome Day 2024

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக மனநலிவு நோய் தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

மனநலிவு நோய், டவுண்சின்ரோம் என்றும் டிரைசோமி 21 என்றும் அழைக்கப்படுகிறது. மரபியல் கோளாறாக கருதப்படும் இந்த நோய், 21வது குரோமோசோமின் ஒரு கூடுதல் நகல் இருப்பதால் உண்டாகிறது. இது குழந்தை வளர்ச்சியை உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளில் 1000 அல்லது 1100-ல் ஒன்று மனநலிவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: பழமையான கருத்துகளை முடிவுக்கு கொண்டு வருதல் (End to Stereotypes)

மார்ச் 21 –இல் கொண்டாடப்படும் மற்ற தினங்கள் 

  • உலக கவிதை தினம்
  • சர்வதேச காடுகள் தினம்

4.2028 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடம் எது?

  1. டோக்கியோ- ஜப்பான்
  2. பாரிஸ் -பிரான்ஸ்
  3. ரியோ டி ஜெனிரோ- பிரேசில்
  4. லாஸ் ஏஞ்சல்ஸ்- அமெரிக்கா

Answer:– லாஸ் ஏஞ்சல்ஸ்- அமெரிக்காExplanation:

2024-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வரும்  நடைபெறவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, 2024-ம் வருடம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளன. இதற்கு முன்பு இருமுறை (1900, 1924) பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றன.

5.இந்தியாவின் முதல் திரவ இயற்கை எரிவாயு (Liquid Natural Gas – LNG) மூலம் இயங்கும் பொது போக்குவரத்துக்கான பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

  1. கேரளா
  2. மகாராஷ்டிரா
  3. சண்டிகர்
  4. ஒடிஸா

Answer:– மகாராஷ்டிரா

Explanation:

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பொது போக்குவரத்துக்கான பேருந்து ஆனது மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டு இயக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டில் இதேபோன்று திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்தை கேரள அரசு அறிமுகப்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  1. சென்னை மியூசிக் அகாடமியின் உயரிய விருதான சங்கீத கலாநிதி விருது 2024 க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
  2. T.M. கிருஷ்ணா
  3. அருணா சாய்ராம்
  4. லால்குடி விஜயலட்சுமி
  5. பாம்பே ஜெயஸ்ரீ

Answer:– T.M. கிருஷ்ணா

Explanation:

98வது சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்

  • சங்கீத கலாநிதி விருது – தோடூர் மடபுசி கிருஷ்ணா (T.M. கிருஷ்ணா)
  • சங்கீத கலா ஆச்சார்யா விருது – பரஸ்சலா ரவி (V. இரவீந்திரன் நாயர்) மற்றும் கீதா ராஜா
  • TTV விருது – நரசிம்மன் மற்றும் S.வெங்கடேசன் மற்றும் H.K.நரசிம்மமூர்த்தி
  • நிருத்ய கலாநிதி விருது – டாக்டர் நீனா பிரசாத்

கடந்த 97வது சென்னை மீயூசிக் அகாடமி விழாவில் 2023ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதானது கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7.NIA எனும்தேசிய புலனாய்வு அமைப்பு வடிவமைத்த தேசிய குற்ற ஆவண காப்பகத்திற்கான (Digital criminal case management system) மொபைல் செயலியின் பெயர் என்ன?

  1. UMANG
  2. Sankalan
  3. UDGAM
  4. NCRB

Answer:– Sankalan

8.இந்திய சந்தையில் சைபர்ஸ்டர் (Cyberster) என்னும் முதல் ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம் எது?

  1. டாடா மோட்டார்ஸ்
  2. சுசுகி
  3. M.G மோட்டார்ஸ் இந்தியா
  4. மஹிந்திரா

Answer:– M.G மோட்டார்ஸ் இந்தியா

Explanation:

இந்திய சந்தையில் சைபர்ஸ்டர் என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது எம்.ஜி.மோட்டார் இந்தியா நிறுவனம் ,M.G.Motors அறிமுகம் செய்யும் முதல் ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் கார் இதுவாகும்

9.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர் விமானங்களை வாங்க அண்மையில் எந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது?

  1. கானா(Ghana)
  2. கயானா(Guyana)
  3. பிரேசில்
  4. வெனிசுலா

Answer:– கயானா(Guyana)

Explanation:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த இரண்டு டோர்னியர் 228 விமானங்களை இந்தியாவிடமிருந்து வாங்க கயானா ஒப்பந்தம் செய்துள்ளது

10.உலக மகிழ்ச்சி குறியீட்டில் தொடர்ந்து 7 வது முறையாக முதல் இடத்தைப் பெற்றுள்ள நாடு எது?

  1. டென்மார்க்
  2. பின்லாந்து
  3. இங்கிலாந்து
  4. நியூசிலாந்து

Answer:– பின்லாந்து

Explanation:

உலகின்‌ மகிழ்ச்சியான நாடுகள்‌ பட்டியலில்‌ பின்லாந்து முதலிடம்‌ பிடித்துள்ளது. இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்கள் முறையே டென்மார்க்‌ மற்றும் ஐஸ்லாந்து நாடுகள்‌ பிடித்துள்ளன.

Leave a Comment