நெல்லிக்காய் சாறு நன்மைகள்
முன்னுரை
- மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.
- தினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது
நெல்லிக்கனியின் இயற்கை மருத்துவ பயன்கள்
- இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர்.அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100 க்கும் அதிகமாக இருந்தது.இன்றைய சூழ்நிலையில் மனிதன் நவீனம் என்ற பெயரில் உடல்பருமன்,சிறுவயதிலே கண் குறைப்பாடு ,இளநரை,சொத்தைப்பல்,நீரிழிவு நோய் என நோய்களை விலைகொடுத்து வாங்கிவிட்டான்,நமது ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு தீய கொழுப்புகளை மட்டும் சேர்த்து உடலினை பராமரிக்க மறந்துவிட்டோம் .
- நாம் மறந்து போன ,மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களை ,உணவுகளை மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் .அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று “நெல்லிக்காய்”
- நெல்லிக்காய்க்கும் ,தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பலவழிகளில் அறியலாம்.ஆயுர்வேத சாஸ்திரம் முதல் சங்ககால செய்யுள்கள் வரையிலும் நெல்லிக்காயை பற்றி சொல்லாத இடங்களே இல்லை.அந்த அளவிற்கு நெல்லிக்காயின் பயன்கள் அளவில்லாதது.
- அப்படிப்பட்ட நெல்லிக்கனியை அரைத்து நெல்லிக்கனி சாறு அல்லது நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்
- ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது. சமைத்தாலும் வேக வைத்தாலும் காயவைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி. ஆயிர்வேதம் மற்றும் யுனானி மருத்துவங் களில் பெருமளவு நெல்லியைப் பயன்படுத்திவருகிறார்கள்.
நெல்லிக்காய் வகைகள்
- பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும்.நெல்லிக்காயை சாறாக உண்ணும் போது திரவடிவில் செல்வதால் இன்னும் வேகமாக உடலில் சேருகிறது.நெல்லிக்காயை விட சாறுக்கு வேகம் அதிகம்
நெல்லிச்சாறின் பயன்கள்
- நெல்லிச்சாறை தினமும் குடிப்பதனால் செல்கள் புத்துணர்வு பெரும் சுருக்கங்கள் இல்லாமல் தோல் பொலிவு பெரும் .
- இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும் ரத்தம் உறைந்து போவதை தடுக்கும் .
- சிறுநீரகம் நம் உடலின் திரவ கழிவுகளை வெளியேற்றும் .அதில் ஏற்படும் குறைபாடுகளை குணப்படுத்தும் .
- வைட்டமின் எ அதிகம் இருப்பதனால் கண் குறைபாடுகளை குணப்படுத்தும் .
- கால்சியமும்,பொட்டாசியமும் எலும்புகளை வலுவடைய செய்யும் .ஸ்கேர்வி போன்ற பல் சம்பந்த மான பிரச்சனைகளை குணப்படுத்தும் .
- முடி கொட்டுதல் ,இளநரை,பொடுகு போன்ற தலை சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும்
- கல்லிரல் ஏற்படும் தொற்று காரணமாக மஞ்சள்காமாலை ஏற்படுகிறது.நெல்லிச்சாறு ரசாயனங்கள் இதனை முற்றிலுமாக குணப்படுத்தும்.
- நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது .அதில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிசாறு ஒரு சிறந்த மருந்து .
- கண்ட உணவுகளை உண்ணுவதனால் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள்,புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி.உடல் பருமனை குறைக்க உதவும்
- ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுகளை தடுத்து அளிக்கிறது .எனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்து .
- கர்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது .முக்கியமாக மகப்பேறுகாலங்களில் உதவும் இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.
- இது அசிடிட்டி, வயிற்று உபுச பிரச்சனை என இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உதவுகிறது
- இது செரிமானத்துக்கு உதவுகிறது
- இது சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. அதனால், இதயத்துக்கு மிகவும் நல்லது
- எடையை குறைக்கவும், சரியான விகிதத்தில் பராமரிக்கவும் உதவும்
- இது நம்முடைய கண்களுக்கும் மிகவும் நல்லது
- இது நமக்கு நிம்மதியான உணர்வையும் தருகிறது
அதோடு, சருமத்துக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால், பரு, சருமம் வறண்டு போகுதல், சொறி சிரங்கு, சருமம் சிவந்து போகுதல் போன்ற சரும வியாதிகள் வராமல் தடுக்கும்.
உடல் எடை
- நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். தில் இருக்கும் நார்ச்சத்து, உணவில் இருக்கின்ற கொழுப்புக்கள் உடலில் படிந்து எடை அதிகரிப்பதை தடுத்து. உடல் எடையை குறைக்கிறது.
கண்கள்
- கண் பார்வை மேம்பட வேண்டுமெனில், நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு கண்களில் உள்ள கருவிழியின் திசுக்களின் வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டு, கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. மேலும் நெல்லிக்காய் ஜூஸ் கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.
எச்சரிக்கை
- எந்தவொரு மூலிகையை முயற்சித்து பார்ப்பதற்கு முன்பாக, மருத்துவர் ஆலோசனை கட்டாயம் வேண்டும். நம்முடைய உடல் இயல்பு மற்றும் வியாதி அடிப்படையில், இவற்றை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்பதனை மருத்துவர் தான் நமக்கு பரிந்துரைப்பார். எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அளவையும் மருத்துவரே நமக்கு பரிந்துரை செய்வார்.