அறநிலைய துறையில் வேலைவாய்ப்பு/Arulmigu Agatheeswara Swamy Temple Recruitment
தமிழ்நாடு அரசு அறநிலைய துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்:
4 பணியிடங்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு
கல்வித் தகுதி :
சுயம்பாகி
(1) தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும்
(2) கோயிலில் நிலவும் பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும்
(3) கோயில் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
எலக்ட்ரீசியன்
(1) அரசு/அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் எலக்ட்ரிக்கல்/வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; மற்றும் (2) எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டில் இருந்து “பி” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வாட்ச்மேன் – தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
திருவழகு – தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
சம்பள விவரம்:
Suyambagi – Rs.13200 – 41800/-
Electrician – Rs.12600 – 39900/-
Watchman – Rs.11600 – 36800/-
Thiruvalagu – Rs.10000 – 31500/-
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 முதல் 45 வயது வரை
நிபந்தனைகள்
1.அரசாணை எண்:114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை நாள் 03.09.2020ன் படி இந்துசம நிறுவனங்களின் (பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) பணி விதிகளின்படி இப்பணி நியமனம் செய்யப்படும்.
2.விண்ணப்பதாரர், 01.07.2024 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது நிறைவு செய்யாதவராவும் இருக்க வேண்டும்.
3.தமிழில் நன்கு படிக்க தெரிந்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர் இந்து மதத்தினைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
4.ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
5.தொற்று நோய் மற்றும் உடல் அல்லது மனநிலை குறைபாடுகள் மற்றும் கண் குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்
6.கிரிமினல் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை அடைந்தவர்கள் ,பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மாணிக்கப்பட்டவர்கள் ,அரசுப் பணியிலிருந்தும் பொது ஸ்தாபணங்களில் இருந்தும் இதன் திருக்கோலில்களில் இருந்தும் பணிபுரிந்து தண்டனை பணிகம் செய்யப்பட்டவர் இத்திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் அவர்களின் வாரிசுதாரர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத்தகுதியற்றவர்கள்
7.திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் செயல் அலுவலர் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில்,வில்லிவாக்கம் சென்னை- 49 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .பணியிட விவரங்களுக்குக்கான கல்வித் தகுதி வயது வரம்பு நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் வந்து கேட்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்
8.சுயம்பாகி பணியிடத்திற்கு விண்ணப்பவர்கள் திருக்கோயில் பழக்க வழக்கபடி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க வேண்டும். மற்றும் திருக்கோயில் பூஜை திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
9.மின் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மின்சார வாரிய தொழில்துறை பயிற்சி (ITI) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் மின்சார உரிய வாரியத்தால் வழங்கப்பட்ட B சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
10.பகல் காவலர் மற்றும் திருவலகு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11.நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று பெற்று சமர்பிக்க வேண்டும்
12.திருக்கோயில் பணியில் அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
13.விண்ணப்பம் அனுப்பப்படும் மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும்
14. வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்விற்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
15. நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
16.நேர்முக தேர்வானது அதற்குண்டான குழுவினரின் முடிவுக்கும் இத்துறை ஆணையரின் அங்கீகாரத்திற்கும் உட்பட்டதாகும்
17.விண்ணப்பதாரர் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மருத்துவ தகுதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
18.இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும் 09.12.2024 திங்கட்கிழமை மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் மாதிரி படிவத்தில் கண்டுள்ளவாறு தேவையான விவரங்கள் மற்றும் இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்களும், மாதிரி படிவத்தின் படி இல்லாமல் வேறுவகையில் உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
19. விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட (Xerox) புகைப்பட நகல்களாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.
20. நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும் விண்ணப்பதாரர் மட்டுமே அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.
21. காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தாலும், இவ்விளம்பரத்திற்கு பின்னர் புதியதாக விண்ணப்பித்தல் வேண்டும்.
22. இதர ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் அலுவலக வேலைநாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
23. மேற்கண்ட பணிகளுக்கு நிரணயிக்கப்பட்டுள்ள கூடுதல் தகுதி என்பது இத்திருக்கோயிலில் காலகாலமாக பின்பற்றி பணியாற்றி வந்த விவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
24.இணைக்கப்பட வேண்டிய சான்றுகளின் சான்றிடப்பட்ட நகல்கள்.
1.வயது
2.கல்வித்தகுதி
3.சாதி என்றிதழ்
4சிறப்பு தகுதி சான்றிதழ்
5.முன் அனுபவம் சான்றிதழ் (ஏதேனும் இருப்பின்)
6தன்னடத்தை உன்று அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து 0812204க்கு பின்பு பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்
7.ஆதார் அட்டை
8.இருப்பிட சான்று
25.தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பணிநியமன ஆணை வழக்கப்பட்டதும் பணியில் சேரும் முன் உடற்தகுதி என் அரச பதிவு பெற்ற மருத்துவமிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் புதிவுபெற்ற அலுவலர் (Gazetted Officer ) யிடம் ஒப்பம் பெற்று சர்பிக்கவும், அசல் ஆவணம் எதும் இணைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
26.இதர நிபந்தனைகள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் ——-பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/ செயல் அலுவலர். செயல் அலுவலர் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில்,வில்லிவாக்கம் சென்னை- 49 என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.12.2024 @ 05.45 PM தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
கல்வி &வேலைவாய்ப்பு தகவல் – whats App Group link -Click Here