நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் 

நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

முன்னுரை 

உடல் எடையை குறைப்பதற்கும் உடலின் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்துவதற்கும்  எளிமையான நடைபயிற்சி செய்வது எடை குறைப்பு என்பதைக் கடந்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

அதிகாலையில் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் 

  • நடைபயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காலை நடைப்பயிற்சி மனதை அமைதிப்படுத்தும். புதிய காற்றை சுவாசிப்பது மனதை உயர்த்துகிறது,
  • உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது
  • உங்கள் உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும்
  • மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதால் நிம்மதியாக உணர்வீர்கள்
  • உடலில் சக்தி அதிகரிப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்
  • எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்
  • ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும்
  • உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்
  • உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்க 

நடைபயிற்சி செய்வது தலை முதல் கால் வரை இரத்த ஓட்டத்தையும் ஆக்சிஜன் ஓட்டத்தையும் அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டம் கிடைப்பதை உறுதி செய்கிறது. உங்கள் மூளைக்கும் ரத்தம் அதிகமாக பாய்வதால் அது உங்கள் உங்களை சுறுசுறுப்பாக்கி, உங்கள் மூளைத் திறனை அதிகரிக்கும்

எலும்புகளின் ஆரோக்கியம்

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சி நடைப்பயிற்சி இது தான். உங்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க மற்றும் கட்டுக்குள் வைத்திருக்க நாள் முழுவதும் ஏசி அறைக்குள்ளேயே அல்லது வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கு நடைபயிற்சி தினசரி தேவையான சூரிய ஒளியைப் பெறுவதில் உதவுகிறது. சூரியஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்து மூளையை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.

உடலுக்கு வேலை கொடுக்காமல் இருக்கும் பொழுது இருக்கும் மூட்டுப் பகுதிகள் இறுக்கமாகி பாதிப்படையும் தன்மை ஏற்படுகிறது. மூட்டுகளை நெகழ்வாக வைப்பதற்கு நடைப்பயிற்சி சிறந்த மற்றும் எளிமையான உடற்பயிற்சியாகும். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் கடினமான உடற்பயிற்சி செய்தான் இதயத்தை, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே நேரத்தில் குறைந்த அளவாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

முடிவுரை

ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அல்லது குறிப்பிட்ட காலம் வரை நடக்கும் பொழுது உடலில் எண்டார்பின் என்ற ஹார்மோன் ரிலீஸ் ஆகும். இது இயற்கையான வலி நிவாரணியாகும். மற்றும் உங்கள் மனநிலையை மேம்படுத்தக்கூடிய ஹார்மோன். இதனால் நீங்கள் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள்.

Leave a Comment