செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்வது
மொபைல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டால் பலருக்கு என்ன செய்வது என்று தெரியமால் பதட்டமடைவதுண்டு. மொபைல் நீரில் விழுந்தால் உடனடியாகச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்பதை பற்றி தெரிந்து வைத்து கொள்வது அவசியமானதாகும்.தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீர் விழுந்தாலோ அல்லது தண்ணீர் உங்கள் போன் மீது விழுந்தாலோ – நீங்கள் உடனே செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த சூழ்நிலையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்பதனால், இவற்றை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.
செய்ய வேண்டியவை
- உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் அதை உடனடியாக நீரில் இருந்து அகற்றவும்.
- போன் அதிக நேரம் நீரில் இருந்தால், பெரிய பாதிப்பை உருவாக்கும்.
- எனவே அவற்றை விரைந்து வெளியில் எடுப்பது சிறப்பானது.
- உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும்.உங்கள் ஸ்மார்ட்போனை உடனடியாக தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்
- ஹெட்ஃபோன் போர்ட், சார்ஜிங் சாக்கெட் மற்றும் பிற போர்ட்களில் உள்ள தண்ணீரை அகற்ற உங்கள் ஸ்மார்ட்போனை மெதுவாக அசைக்கவும்.
- ஸ்மார்ட்போனை அணைத்த பிறகு, சுத்தமான மற்றும் உலர்ந்த துணியை எடுத்து அதை நன்றாக துடைக்கவும். . துணைக்கருவிகளை (ஹெட்ஃபோன்கள், கேபிள்கள் போன்றவை) சிம் கார்டு மற்றும் மெமரி கார்டுகளை அகற்றவும். இதற்குப் பிறகு, ஸ்மார்ட்போனை வெவ்வேறு கோணங்களில் அசைக்க முயற்சிக்கவும், இதனால் கூடுதல் தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்படும்.
செய்யக்கூடாதவை
- ஹேர் ட்ரையர் மூலம் தொலைபேசியை உலர வைக்க வேண்டாம்
- சார்ஜரை இணைக்க வேண்டாம் ஏனெனில் அது ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தி மேலும் சேதப்படுத்தும்.
- மைக்ரோ ஓவனில் சாதனத்தை வைப்பது உள்ளிட்ட வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டாம். அதிக வெப்பம் தொலைபேசியை சேதப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்ய முடியாத நிலைமையில் நீங்கள் சர்வீஸ் சென்ட்டர் எடுத்து சென்று சரிசெய்வது மிகவும் நல்லது.