TNPSC Group II Last Minute Preparation Tips
TNPSC குரூப் II எழுதவிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.கண்டிப்பா இந்த தடவ வேலை வாங்கியே ஆகணும்னு கடின முயற்சியுடன் பயிற்சி செய்யுற எல்லாருக்கும் TNPSC வேலை கண்டிப்பா கிடைக்கும் நண்பர்களே விடாமுயற்சி ஒருநாளும் தோல்வி அடைவதில்லை.
போட்டித்தேர்வின் மூலம் ஒருவர் தன் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் அதை ஒருவித பதற்றத்துடன் அணுகாமல் உழைப்பின் அறுவடை நாள் (Yield day) போன்ற மனநிலையில் கையாள வேண்டும் என்பது தான் மிக முக்கியமானது.
‘முதலில் பயம், பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். வெற்றிக்கான முதல் தடை அவைதான் ரிலாக்ஸாக மனக்குழப்பம் இல்லாமல் தேர்வுக்குத் தயாராகுங்கள் தேர்ச்சி மட்டும்தான் உங்கள் இலக்கு நம்மால் முடியுமா இவ்வளவு லட்சம் பேரில் நாம் தேர்ச்சி அடைவோமா? என்பது போன்ற நெகட்டிவான கேள்விகளைத் தள்ளி வைத்துவிடுங்கள்
பொதுவாக போட்டித் தேர்வு தாள்கள் (Exams) ஒவ்வொரு தேர்வின் போதும் மாறுபடும். எனவே நாம் தேர்வுக்கு மிக நன்றாக உழைத்திருந்தும் அதிக எதிர்பார்ப்புகளை (Highly Expectations) வளர்த்து கொள்ளாமல், அவசியமான நேர்மறை எதிர்பார்ப்புகளை (Positive Expectations) மட்டுமே உருவாக்கி கொள்ள வேண்டும் காரணம் தேர்வுத்தாளின் ஒரு சில பகுதிகள் கடுமையாகவும் இருக்கலாம் அல்லது அனைத்தும் மிதமாகவும் (Moderate) இருக்கலாம் Dice Games-ன் Probability போலத்தான் ஒரு கிரிக்கெட்வீரர் எப்படி பிட்ச் தன்மையையும், பௌலரின் திறனையும் கணிக்க முடியாததோ அதே போன்று தான் இது எனவே 3 மணி நேரத்தில் தேர்வுத்தாளுக்கு ஏற்ற மாதிரி நாம் செயலாற்ற வேண்டியது (receiving situation) மிக அவசியம் ஒருவேளை மிதமாக இருக்கும்பட்சத்தில் ஓரளவு அவரசப்படாமல் நிதானத்துடன் செயலாற்ற வேண்டியது மிக முக்கியம் எதுவாகினும் விடைகளை ஒரு முறை கேள்வியுடன் ஒப்பிட்டு பார்த்து விடையளிக்க வேண்டும். இதன் மூலம் Silly Mistakes-ஐ தவிர்க்க முடியும்.
Last Minute Preparation ( Revision )
TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம் , ஐந்து அல்லது ஆறு மாதங்கள் வரை கடுமையாக இந்த தேர்விற்கு தயாராகி கொண்டு உள்ளீர்கள் , இந்த கடைசி நேர Revision ரொம்ப முக்கியமானது , திரும்ப திரும்ப பழைய முந்தைய ஆண்டு வினாக்களை கொண்டு தேர்வு எழுதி பயிற்சி செய்யுங்கள் , நடப்பு நிகழ்வுகள் மற்றும் அரசியலைப்பு , இந்திய தேசிய இயக்கம் பாடங்களை நன்கு பயிற்சி செய்யவும். இங்கு நீங்கள் பயிற்சி செய்ய சாய்ஸ் அகாடமி வெளியிட்டுள்ள Model Exam – Answer Key உடன் பதிவேற்றம் செய்துள்ளோம் நீங்களும் download செய்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம் , உங்களது போட்டி தேர்வு நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
TNPSC OVERALL GENERAL TAMIL PREVIOUS YEAR QUESTION – ANSWERS