Unit – 8 திராவிட மொழிகள் TNPSC Question & Answers 

Unit – 8 திராவிட மொழிகள் TNPSC Question & Answers 

உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை வியத்தகு படைப்புகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.ஆயினும், கண்ணால் காணமுடியாத, நிலையான வடிவத்தைத் தரவியலாத காற்றினால் ஏற்படும் ஒசையை ஓலியாக்கி, அதற்கு வரிவடிவம் தந்து, மொழியாக நிலைபெறச் செய்த மனிதனின் செயலுக்கு இணையான படைப்போ கண்டுபிடிப்போ இந்நாள்வரை தோன்றவில்லை என்பதே உண்மை.

மொழி என்பது ஒருவர் எண்ணங்களையும் கருத்துகளையும் மற்றொருவர் அறிவதற்கு உதவும் கருவியாகும். ஆனால் இக்கருத்தில் வேறுபடுபவர்களும் உள்ளனர். கருவி என்ற எல்லையைத் தாண்டி மொழி பல்வேறு தளங்கலில் பயன்படுவதைக் காண வேண்டும் என்று வேறுபடும் கருத்துடையோர் கூறுகின்றனர்.

உலகில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள், தனக்கெனத் தனிச்சிறப்பும் பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழியே மூலமொழி. அதிலிலருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் கிளைமொழிகள். அவற்றின் பொதுத்தன்மையின் அடிப்படையில், அவற்றை ஒரே மொழிக்குடும்பத்தில் அடக்குவர் மொழியியல் அறிஞர்கள்.

TNPSC OVERALL GENERAL TAMIL PREVIOUS YEAR QUESTION – ANSWERS

இந்திய மொழிக் குடும்பங்கள்: 

இந்திய மொழிக் குடும்பங்கள் நான்கு வகைப்படும். அவை:
01. இந்தோ – ஆசிய மொழிகள்
02. திராவிட மொழிகள்
03. ஆஸ்திரோ – ஆசிய மொழிகள்
04. சீன – திபெத்திய மொழிகள்

மொழிகளின் காட்சி சாலை: 

இந்தியாவில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளை மொழிகளும் பேசப்படுவதால், மொழிகளின் காட்சி சாலை (Museum of Languages) என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.

நடைமுறையில் உள்ள திராவிட மொழிகள்:

இன்றைக்கு இருபத்து மூன்றனுக்கும் மேற்பட்ட திராவிடமொழிகள் நடைமுறையில் உள்ளன. இம்மொழிகள் 01. தென் திராவிட மொழிகள் 02. நடுத்திராவிட மொழிகள் 03. வடதிராவிட மொழிகள் என்று பிரிக்கப்படுகின்றன.

தென் திராவிட மொழிகள்:

 தமிழ், மலையாளம், கன்னடம், துளு, குடகு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.

நடுத்திராவிட மொழிகள்: 

தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூலி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு

வட திராவிட மொழிகள்:

குரூக், மால்தோ, பிராகுய்

திராவிடப் பெருமொழிகள்:

 நடுத்திராவிட மொழிகள் மற்றும் தென் திராவிட மொழிகளில் அடங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை திராவிடப் பெருமொழிகள் என்றழைக்கின்றனர்.

திராவிட நாகரிகம்: 

மொகஞ்சதாரோ, அரப்பா அகழ்வாய்வுக்குப் பிறகு இந்தியாவிலும் மிகச் சிறந்த நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே பரந்து விரிந்திருந்த அப்பழம்பெரும் நாகரிகத்தையே திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும். திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு என்னும் பொருளைத் தருவது. திராவிட மொழிகள், திராவிட இநம், திராவிட நாகரிகம் என்னும் சொற்றொடர்களுள் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல், தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். குமாரிலபட்டர் திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கினார். கால்டுவெல் அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்

திராவிடமும் மொழியியல் அறிஞர்களும்: 

மொழியியல் அறிஞர்கள் தமிழையும், கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை தமிழியன் (Tamilian) அல்லது தமுலிக் (Tamulic) என்று வழங்கினர். எனவே இவ்வின மொழிகள் அனைத்தையும் திராவிட என்னும் சொல்லால் தாம் குறிப்பிட்டுள்ளதாக கால்டுவெல் கூறியுள்ளார்.

திராவிடமும் – தமிழும்: 

தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானதே திராவிடம் என்னும் சொல்லாகும். மற்ற திராவிட மொழிகளை விட தமிழே பழமையானதென்பதாலும், மற்ற திராவிட மொழிகளின் பல்வேறு அம்சங்கள் தமிழியே காணப்படுவதாலும், தமிழை உயர்தனிச் செம்மொழியாகவும் உலகின் மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

திராவிட மொழிகளுள் தமிழ்க்குரிய இடம்: 

தமிழில் இருந்து திராவிடம் என்னும் சொல் பிறந்தது. தமிழ் -> திரமிள -> திரவிட -> திராவிட என்று உருமாறி வந்ததாக ஈராஸ் பாதிரியார் கூறுகின்றார். திராவிட மொழி என்றாலே தமிழ்மொழியையே குறிக்கும். திராவிட மொழிகளுள் மிகவும் தொன்மையான, பண்பட்ட மொழி தமிழே, திராவிடமொழிகளுள் மூலத் திராவிடமொழியின் வடிவத்தையும் மொழிக் கூறுகளையும் வேர்களையும் பெருமளவில் கொண்டுள்ள மொழி தமிழே. இத்தகைய தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.

தமிழ்மொழியின் தொன்மை:

கடல்கோளால் அழிந்ததாகக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் தோன்றியதாகவும், மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து திராவிட இனமும் அவர்தம் மொழியும் இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும் என்றும் ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழ் இந்தியாவில் பேசப்பட்டு வந்ததாகவும், பல்வேறு ஆய்வுக்குரிய கருத்துக்கள் உள்ளன.

தொல்காப்பியமும் – இலக்கணங்களும்:

 திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை, முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிடமொழி, தொன்மைத் திராவிடமொழி எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர். அம்மூலமொழியே தமிழ்மொழி. ஏனைய திராவிட மொழிகள் தமிழிலிருந்து தோன்ற வளர்ந்தவை.

தமிழ் நூல்களுல் இன்று நமக்குக் கிடைக்கும் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஒரு இலக்கண நூல் உருவாக வேண்டும் என்றால் அதற்குமுன் பழமையான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல் என்பதுதான் அறிவியல். எனவே தொல்காப்பியத்திற்கும் முன்பே பழமையான இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் தமிழ் பழமையான செம்மொழி என்பது உறுதியாகிறது.

செம்மொழிக்குறுகளும் தமிழ்மொழியும்: 

தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய – இலக்கண வளம், சிந்தனைச் செம்மை, கலை – பண்பாட்டு வளம், இவற்றுடன் பல்வேறு நாட்டில் பேசப்படும் மொழியாக விளங்கும் மொழியே செம்மொழியாகும். இவையே செம்மொழிக்கான (Classical Language) கூறுகளாகவும் கருதப்படுகின்றன.

மேற்கொண்ட அளவுகோள்களில் உள்ள அனைத்தும் தமிழ்மொழியில் காணப்படுவதால் தமிழே மிகச்சிறந்த செவ்வியல் மொழியாகும்.
தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழராகிய நமது கடைமையாகும். இதனை உணர்ந்து தமிழின் சீரிளமையைக் காக்க, என்றும் பாடுபடுவோம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் சில வினாவிடைகள்:

 1.திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது?

Answer: தமிழ்

  1. தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது?

Answer: மொழியாகும்

  1. மனிதன் தமக்கு தோன்றிய எண்ணங்களை எதன் மூலம் பிறருக்கு தெரிவிக்க முயன்றான்?

Answer: மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள்

  1. இந்தியால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer: 1300க்கு மேற்பட்டது

  1. இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டடுள்ளன?

Answer: நான்கு (4)

  1. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாக”திகழ்கிறது எனக் கூறியவர் யார்?

Answer: ச. அகத்தியலிங்கம்

  1. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

Answer: குமரிலபட்டர்

  1. தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான்”திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?

Answer: ஸீராஸ் பாதிரியார்

  1. ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்?

Answer: தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா

  1. 18ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் —– மொழியிலுருந்து உருவானவை என்ற கருத்து நிலவியது?

Answer: சம்ஸ்கிருத மொழி

  1. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்?

Answer: அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

  1. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

Answer: அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

  1. 1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?

Answer: பாப், ராஸ்க், கிரிம்

  1. முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?

Answer: பிரான்ஸ் எல்லிஸ்

  1. தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?

Answer: ஸோக்கன்

  1. தமிழியன் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள் எவை?

Answer: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா

  1. தமிழ் மொழி ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்ற கருத்தை கூறிய அறிஞர்கள் யார்?

Answer: ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர்

  1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: கால்டுவெல்

  1. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு?

Answer: 1856

  1. திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சம்ஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறியவர்?

Answer: கால்டுவெல்

  1. திராவிட மொழிக் குடும்பங்களின் வகைகள் எத்தனை?

Answer: மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்

  1. தென்திராவிட மொழிகள் எவை?

Answer: தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா

  1. நடுத்திராவிட மொழிகள் எவை?

Answer: தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா

  1. வடதிராவிட மொழிகள் எவை?

Answer: பிராகுயி, குருக், மால்தோ

  1. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை?

Answer: எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா

  1. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?

Answer: 28

  1. கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: தமிழ்

  1. கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: மலையாளம், கன்னடம்

  1. கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: தெலுங்கு, குடகு

  1. ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: குருக்

  1. கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: பர்ஜி

  1. கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: தோடா

  1. மூன்று என்ற எண்ணுப் பெயர் மூணு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

Answer: மலையாளம்

  1. மூன்று என்ற எண்ணுப் பெயர் “மூரூ” என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

Answer: கன்னடம்

  1. மூன்று என்ற எண்ணுப் பெயர் “மூஜி” என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

Answer: துளு

  1. எந்த மொழியில் தினை, பால், என் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை?

Answer: ஆங்கிலம்

  1. திராவிட மொழியில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம் பெறுவதில்லை?

Answer: மலையாளம்

  1. கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு?

Answer: பொ. ஆ. ஒன்பதாம் நூற்றாண்டு

  1. பொ. ஆ. 11ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட “பாரதம்” என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: தெலுங்கு

  1. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட ‘ராம சரிதா’என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: மலையாளம்

  1. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு?

Answer: பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு

  1. பொ. ஆ. 9ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட ‘கவிராஜ’மார்க்கம் என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: கன்னடம்

  1. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட ‘ஆந்திர பாஷா பூஷணம்’என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: தெலுங்கு

  1. பொ. ஆ. 15ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட ‘லீலா திலகம்’என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: மலையாளம்

  1. தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: மு. வரதராசனார்

  1. ‘இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: செ. வை, சண்முகம்

  1. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது?

Answer: மொரீசியஸ், இலங்கை

  1. ஒன்று என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் —– என்ற கூறப்படுகிறது?

Answer: ஒன்சி

  1. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை —– மொழியில் அமைந்துள்ளன?

Answer: தமிழ்

  1. எந்த மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது?

Answer: தமிழ் மொழி

51.இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை எனக் குரிப்பிட்டவர் – Answer: ச.அகத்தியலிங்கம்

52.திராவிடம் என்னும் சொல்லை உருவாக்கியவர் – Answer: குமரிலபட்டர்

53.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் Answer ராபர்ட் கால்டுவெல்.

 

TNPSC History முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட வினா விடை 2013 -2020

Leave a Comment