பாரதிதாசன் – TNPSC முந்தைய ஆண்டு வினா விடைகள் Bharathidasan – TNPSC Previous Year Question Answers
முன்னுரை
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
பாரதியார் மீது பற்று
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
TNPSC முந்தைய ஆண்டு வினா விடைகள்
1.கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
(A) குடும்ப விளக்கு
(B) பாண்டியன் பரிசு
(C)தேன் மழை
(D) குறிஞ்சித் திட்டு
2.நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்” என்ற வரிகளில் “ஒற்றைக்கால் நெடிய பந்தல்” எனக் குறிக்கப்பெறுவது எது?
(A) மூங்கில் மரம்
(B) தேக்கு மரம்
(C)ஆல மரம்
(D) அரச மரம்
3.பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குக் கொடுக்கப்பட்ட விருது
(A) சாகித்திய அகாடமி விருது
(B) குடியரசுத் தலைவர் விருது
(C) சோவியத் நாட்டு விருது
(D) தாமரைத் திரு விருது
4.பாரதிதாசன் ‘குடும்பவிளக்கு’ என்னும் நூலில் எப்பகுதியில் ‘விருந்தோம்பல்’ எனும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார்?
(A) ஐந்தாம் பகுதி
(B) முதல் பகுதி
(C) நான்காம் பகுதி
(D) இரண்டாம் பகுதி
5.”இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கவிமணி
(D) நாமக்கல் கவிஞர்
6.தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்” – யார் யாரைப் பாடிய வரிகள்?
(A) பாரதியார் – பெரியாரை
(B)பாரதிதாசன்- பெரியாரை
(C) சுரதா – வீரமாமுனிவரை
(D) மு. மேத்தா-திருவள்ளுவரை
7.தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை இது யார் கூற்று?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கண்ணதாசன்
(D) வாணிதாசன்
8.கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
9.சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில் – இவ்வடியைப் பாடியவர்
(A) பாரதியார்
(B)பாரதிதாசன்
(C) கவிமணி
(D) சுரதா
10.பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
(A) பாரதியார்
(B)பாரதிதாசன்
(C) சுரதா
(D) வாணிதாசன்
பொருத்தமான விடையைத் தேர்வு செய்க
11.’தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்’ திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்?
(A) திரு.வி.க
(B) ஒளவையார்
(C) பாரதியார்
(D)பாரதிதாசன்
12.கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாத நூல் எது ?
(A) இசையமுது
(B) கண்ணகி புரட்சிக்காப்பியம்
(C) தமிழியக்கம்
(D)தமிழ்ப்பசி
பாரதியார் – TNPSC முந்தைய ஆண்டு வினா விடைகள்
இந்திய தேசிய இயக்கம் – Important Notes in Tamil